Thursday, March 5, 2009

வேணாம், கிட்ட வராதீங்க !

இவ்வளவு சொன்ன பிறகும், இந்த பக்கம் வந்திருககீங்கன்னா....... இப்போ கூட ஒன்னும் கெட்டுப் போகல, நேரா கீழே உள்ள " யாராண்ணே இருக்கும் ? " இதை மட்டும் படிச்சுட்டு கிளம்புங்க...
இன்னும் இங்க தான் இருக்கீங்களா, சரி படிங்க, விதி யாரை விட்டது ?அடரிருள் தேகத்துக்குள் வந்த அக்னி தேவதை !நினைவுகள் அழிந்த
நடுநிசி நித்திரையில்
ஆதியந்தமேதுமற்ற 
அடரிருள் பிரபஞ்சத்தின்
ஏகாந்த படிமம் தாங்கி
கவிழ்ந்த கனபரிமானத்தில்,
கடிவாளமற்ற புரவியேறி
சூன்யப்பெருவெளியை
சுமக்கின்ற கரும்பள்ளத்தின்
சுழி தாண்டிய பிரதேசத்தின்
புதையல் நோக்கிப் பறக்கின்றேன் !

சுழல்கின்ற சுழியினுள்
உயிர்பெற்ற ஒளிப்புள்ளி
கற்றையென தெறித்து வந்து
எரிதழலாய் வளர்கிறது,
சுழற்சி விதிகள் மாறும் போது
ஜ்வாலையாய் எழுந்து நின்று
விஸ்வரூபம் எடுக்கிறது !

கொழுந்துவிட்டு எரியும் மேனி
முழுவதுமாய் பிரபஞ்ச நெருப்பு,
ஒளிபிம்பத்தின் நிறைந்த கீற்றாய்
வழிநடத்தும் பெருவிழிகள்,
சுடர்மிகு விழிவழியே 
சிரிக்கின்றாள் எனைப்பார்த்து !

புரவி, புதையல் எல்லாம் துறந்து
என் ஆதியந்தம் எல்லாம் மறந்து
சேர்ந்து நானும் எரிகின்றேன்,
தழலோடு தழல் சேர்ந்த
தனித்துவத்தை உணர்கின்றேன் !


சரி, இவ்வளவு தூரம் பொறுமையா படிச்சிருக்கீங்க, நான் என்ன சொல்ல வர்றேன்னு தெரியாமலே போகலாமா ? இதையும் படிச்சுட்டு ஒரு நல்ல பதிலா சொல்லிட்டுப் போங்க !!

யாராண்ணே இருக்கும் ?
நேத்து பொழுதுசாய 
படுத்தது தான் தெரிஞ்சது,
அடிச்சுப் போட்டாப்ல 
அப்படியொரு உறக்கம்ண்ணே !
நட்டநடு ராத்திரில
குப்பறக்க படுத்திருந்தப்ப,
கண்ணக் கட்டி காட்டுல விட்ட மாதிரி
திக்குத் தெரியாத திசையில,
தூரதேசமா போயிட்டிருக்காப்ல,
அப்படியொரு கனவுண்ணே !

அப்போ, இம்மினிக்கானா 
புள்ளி மாதிரி ஆரம்பிச்சு
தீயாட்டம் தகதகன்னு
சுத்தி நின்னு எரியுது !
கொஞ்சம் சுதாரிச்சுப் பார்த்தா...

மோகினியோ, பிசாசோ ஏதோ ஒன்னு
மானத்துக்கும் பூமிக்குமா 
நெருப்பாட்டம் ஜொலிக்குது,
நான் அப்படியே 
வாய் பொழந்து நிக்கிறேண்ணே !
என் கிட்டக்க தாண்ணே,
நிக்கிறாப்புல நிக்குது,
ஆனா கண் கூசுறாப்புல மின்னுதுண்ணே !

அப்படியே லேசா சிரிச்சுக்கிட்டே
என்னை ஒரு பார்வை பார்த்துச்சு பாரேன்,
எனக்கு என்னமோ போல ஆயிருச்சுண்ணே !
ஆடு, குட்டி, காடு, கழனி 
அல்லாத்தையும் விட்டுப்புட்டு 
அது கூடவே செத்துப் போயிரலாம்னு 
தோனுச்சுன்னா பார்த்துக்கோயேன் !16 comments:

ஆண்ட்ரு சுபாசு said...

கொலைவெறி

isakki said...

அப்படியே லேசா சிரிச்சுக்கிட்டே
என்னை ஒரு பார்வை பார்த்துச்சு பாரேன்,
எனக்கு என்னமோ போல ஆயிருச்சுண்ணே !
ஆடு, குட்டி, காடு, கழனி
அல்லாத்தையும் விட்டுப்புட்டு
அது கூடவே செத்துப் போயிரலாம்னு
தோனுச்சுன்னா பார்த்துக்கோயேன் }

ஐயோ பாலா !!! படக்குன்னு இப்பிடி ஒரு முடிவு எடுத்துராதே !!! அது சிரிச்சுகிட்டே பார்த்தா ,நீயும் திருப்பி பாரு !!!! அந்த மோகினி உன் சிரிப்பை பார்த்தவுடனே என்ன முடிவு எடுத்ததுன்னு அடுத்த கனவுல கேட்டு சொல்லு .இதை விட்டுட்டு சேது போயிரலாம்னு சின்னபிள்ளைதனமா பேசிகிட்டு இருக்க?


கொழுந்துவிட்டு எரியும் மேனி
முழுவதுமாய் பிரபஞ்ச நெருப்பு,
ஒளிபிம்பத்தின் நிறைந்த கீற்றாய்
வழிநடத்தும் பெருவிழிகள்,
சுடர்மிகு விழிவழியே
சிரிக்கின்றாள் எனைப்பார்த்து !


புரவி, புதையல் எல்லாம் துறந்து
என் ஆதியந்தம் எல்லாம் மறந்து
சேர்ந்து நானும் எரிகின்றேன்,
தழலோடு தழல் சேர்ந்த
தனித்துவத்தை உணர்கின்றேன் !


ரொம்ப நல்லா இருக்குது பாலா, வேற எதையும் யோசிக்காம பார்த்த ஒரு நல்ல ஆன்மிக உணர்வு ஏற்படும்.ஒருவேளை உங்க மதுரை மீனாக்ஷியை (சாமி பாலா!!) நினைச்சுகிட்டே படுத்தியோ என்னவோ?(நீ அந்த தப்பு எல்லாம் பண்ண மாட்டேன்னு தெரியும்)

இது இல்லன்னா அடிக்கடி வெடிகுண்டு வெடிக்கிற செய்தி வருதுல்ல அதுல பயந்து போய் இருப்ப!
இது எதுவுமே இல்லன்னா ,எதாவது முட்டு சந்துல போகும் போது எதாவது காத்து கருப்பு அடிச்சு இருக்கும்.(ஹி ஹி!)

madhan said...

முதலாவது வகை வீட்டு கொல்லையில் பூத்திருக்கும் ரோஜா , இரண்டாவது வகை குளத்தில் மலர்ந்திருக்கும் தாமரை .

//எல்லாம் மறந்து
சேர்ந்து நானும் எரிகின்றேன் //

"ஜோதியில் ஐக்கியமானேன் " (யார் ஜோதி என்று கேட்க/யோசிக்க வேண்டாம் (!) ) என்பதை விவரித்த விதம் அழகு

//சுழற்சி விதிகள் மாறும் போது
ஜ்வாலையாய் எழுந்து நின்று
விஸ்வரூபம் எடுக்கிறது !//

அட சயின்ஸ் கவிதை .

//அப்படியே லேசா சிரிச்சுக்கிட்டே
என்னை ஒரு பார்வை பார்த்துச்சு பாரேன்//

அது தான் அதே தான்......இவளுகளோட நமக்கு இருக்கும் பிரச்சினையே !!!

-மதன்

madhan said...

புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் !!!

-மதன்

Rajasekaran@vaatthi said...

ஆடு, குட்டி, காடு, கழனி
அல்லாத்தையும் விட்டுப்புட்டு
அது கூடவே செத்துப் போயிரலாம்னு
தோனுச்சுன்னா பார்த்துக்கோயேன்


Summa than solrae .........

maanasthan said...

your poems are definitely progressing to the next stage...

The selection of the theme is excellent... At one point of time or the other, every one of us resent this materialistic world, try to untie the knot of the mystery of life, and ready to renounce this life for anything that we do not understand. yours is a good effort in this direction...

generally, you are a good prose writer. even when you are writing the poems, you import the prose writing skills in your poems, that makes your poems more enjoyable...

you have elaborated the crux of your poem at the bottom. it has helped me a lot in understanding the poem... when ever you write a poem, let this tradition continue...

sari...sari... ippo matter'ukku varren...

ponga bosss, antha sandaaali unga kanavulaiyum vara aarambichitaalaaa, muthalla sirippaaa, appuram pesuvaaa, appuram valakkampola nammala maadiri oru appaavi (vayasu)payyana loosa'aa alaiya vitturuvaa...jaaakkirathai...

aamaa, kavithai eluthura palakkam, idaiyila vandhadhaa, illa chinna vayasil irundhae'vaa... oru nalla mana nala doctor'a paarpathu better...

//ஆடு, குட்டி, காடு, கழனி
அல்லாத்தையும் விட்டுப்புட்டு
அது கூடவே செத்துப் போயிரலாம்னு
தோனுச்சுன்னா பார்த்துக்கோயேன் !//

ippo sonniyae, ithu 100'la oru vaarththai... namma enna vaalnthu nobel parisu vaangapporomaa, illaa olympic'la thangam vaanga poromaa... ithula yosikkarathukku onnume illa... go ahead... appuram ethaavadu intha maadiri mudivukku vandenna, unnoda "ஆடு, குட்டி, காடு, கழனி" mattum illaamal unnudaiya credit card, bank balance ellaath'thaiyum en poruppil vittuvidu...
by,
padmashri.maanasthan(pride man).
CEO - BPMPVVVV sangam
(blog'ungara perla mokka podura vengambayalugala veratti veratti vettugira sangam)
govt of India approved,
non profit organisation,
no branches outside chennai,
litigation entertained only in chennai high court,
membership fee - just RS 100 or us$ 2.5 or 2 uk poundsterling,
Donations accepted,
website:www.maanasthan.com
email:maanasthan@yahoo.com

maanasthan said...

//ஐயோ பாலா !!! படக்குன்னு இப்பிடி ஒரு முடிவு எடுத்துராதே !!! அது சிரிச்சுகிட்டே பார்த்தா ,நீயும் திருப்பி பாரு !!!! அந்த மோகினி உன் சிரிப்பை பார்த்தவுடனே என்ன முடிவு எடுத்ததுன்னு அடுத்த கனவுல கேட்டு சொல்லு .இதை விட்டுட்டு சேது போயிரலாம்னு சின்னபிள்ளைதனமா பேசிகிட்டு இருக்க?//

//இது இல்லன்னா அடிக்கடி வெடிகுண்டு வெடிக்கிற செய்தி வருதுல்ல அதுல பயந்து போய் இருப்ப!
இது எதுவுமே இல்லன்னா ,எதாவது முட்டு சந்துல போகும் போது எதாவது காத்து கருப்பு அடிச்சு இருக்கும்.(ஹி ஹி!)//

mr. isakki kalakkureenga ponga...

பாலகுமார் said...

அனைவருக்கும் மிக்க நன்றி !

sathya said...

hi nice kavidhai......... u have done ur job well..puriyathamadhiri ezhuthi saathichuteenga....itha padichuttu aalaakku oru madhiri arrththam purinjukiraanga..athan spl....but unmaiyana antha mohini yaaru friend? :-) unga manam kavarntha antha mohini pavam than...unmaiyeleya mohini ungala paarththu bayanthu poyirukkum......kavigarkala mattume puriyatha madhiri ezhutha mudiyum..try panreenga..good....:-)

மயிலவன் said...

ஏன் இப்படி எல்லாம்.......
நல்லா தானே இருந்த......
என்னாச்சு உன்னக்கு......

மயிலவன் said...

///ஆடு, குட்டி, காடு, கழனி
அல்லாத்தையும் விட்டுப்புட்டு
அது கூடவே செத்துப் போயிரலாம்னு
தோனுச்சுன்னா பார்த்துக்கோயேன் !///

ஏன் இப்படி எல்லாம்.......
நல்லா தானே இருந்த......
என்னாச்சு உன்னக்கு......

///மோகினியோ, பிசாசோ ஏதோ ஒன்னு
மானத்துக்கும் பூமிக்குமா
நெருப்பாட்டம் ஜொலிக்குது,
நான் அப்படியே
வாய் பொழந்து நிக்கிறேண்ணே !
என் கிட்டக்க தாண்ணே,
நிக்கிறாப்புல நிக்குது,////


மோகினியோ, பிசாசோ உன் கனவுல வருதா....!
நாங்க இத நம்பனுமா.......!


really nice.... anything is kidden in this..

Anonymous said...

Un thambikitta nee innum vishayaththa sollalayo????

[Un Approval illaama comment display aahaathunnu yengallukku theriyum! Nee unmayilayae madura kaaranaa iruntha itha approve pannu paappom! (Madura kaaravingallukku veeram athihamudooi!)]

பாலகுமார் said...

எங்க வீரமெல்லாம் சும்மா .......
பெயர் போடாம கமெண்ட் கொடுத்த உங்க வீரம் தான் கிரேட் !!!!! :) :) :)

Anonymous said...

nallathu pannumpothu naanga publicity ellam virumburathillai friend .yaeetho engalal aana udavi.unakku oru nallathu nadakkuthunna athuvae pothum.yethukkupa enga paer ellam sollikittu?
aanalum un thambi oru vaarthai kaekkalaiyaa?cha!

மயிலவன் said...

KaEttu than theriyanuma brother....

Yalini said...

Algiya nadail Inimaiyana tamil,kavithai vadivil..

Karpaniyo unmaiyo umatha tamil inimai..

Post a Comment