Tuesday, August 16, 2011

ஒரு கதை சொல்லவா?


இன்று வண்டிக்கு பெட்ரோல் போடும் போது, முன்னூறு ரூபாய்க்கு போடச் சொல்லி விட்டு ஐநூறு ரூபாய் நோட்டைக் கொடுத்தேன். ‘பங்க்’கில் இருந்த நபர் முன்னூறு ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுவிட்டு மீதி ஆறு ஐம்பது ரூபாய் நோட்டுகளாக மொத்தம் முன்னூறு ரூபாய் கொடுத்தார். எண்ணிக் கொண்டே பர்ஸில் வைக்கச் சென்ற நான் இதை கவனித்து விட்டு மீண்டும் ரூபாயை அவரிடமே கொடுத்து, “சரியா எண்ணிப் பார்த்து கொடுங்கண்ணே!” என்றேன். அவரும் எண்ணிப் பார்த்து விட்டு இரண்டு ஐம்பது ரூபாய் தாள்களை எடுத்துக் கொண்டு சரியான சில்லரையான இருநூறு ரூபாயை கொடுத்து விட்டு, “ரொம்ப நன்றி சார், ரொம்ப ரொம்ப நன்றி சார்” என்றார். நான் லேசாக சிரித்துக் கொண்டே, “பரவால்லண்ணே!” என்று சொல்லி விட்டு வண்டியை கிளப்பினேன்.

ஆனால் இந்த கதையை நீங்கள் கேட்கும் போது, மீதி முன்னூறு ரூபாயை பர்ஸுக்குள் வைக்கப் போன அந்த ஒரு நொடியின் சபலத்தை மறைத்து விட்டுத் தான் சொல்வேன். பரவாயில்லையா?

11 comments:

  1. எப்படியொ திருப்பிக் கொடுதிட்டிஙல்லெ...

    ReplyDelete
  2. மனித மனம் அப்படிப்பட்டது தான் சார்...செய்த நல்லவற்றை மிகைப்படுத்தியும், செய்த தவறை மறைத்தும் பேச வைக்கும்..ஆனால் மனசாட்சி கொல்லும்...

    ReplyDelete
  3. நீண்ட நேரம் நீடித்தால் தான் ,,சபலம் என ஒப்புக்கொள்வேன் ,,உங்கள் நேர்மையை பாராட்டுகிறேன் !!

    ReplyDelete
  4. நீண்ட நேரம் நீடித்தால் தான் ,,சபலம் என ஒப்புக்கொள்வேன் ,,உங்கள் நேர்மையை பாராட்டுகிறேன் !!

    ReplyDelete
  5. Good. sapalam nu sanna onga unmai palam(brave) pedithathu.

    ReplyDelete
  6. யார் சபலப் பதடவில்லை, எதற்கு சபலப்படவில்லை.. அதை மீறி வந்ததுதான் சிறப்பு..

    ReplyDelete
  7. பணத்தை திருப்பி கொடுக்காம இருந்த அந்த பணம்
    காலியா போனவுடனே சந்தோசம் போய் இருக்கும்
    ஆனா "நான் திருப்பிகொடுத்துட்டேன் நான் சபலத்தை
    கடந்துட்டேன்"னு நீ பண்ணின பதிவுல உனக்கு எவ்வளவு
    லாபம் இல்ல பாலா ?
    இதுக்கு பணத்தை திருப்பி கொடுக்காமலே இருந்து இருக்கலாமோ?

    ReplyDelete
  8. அனைவருக்கும் மிக்க நன்றி.

    @மகா: இது கதை தானே மகா. :)

    ReplyDelete
  9. இதுபோல் என் வாழ்விலும் பல முறை நடந்துள்ளது. கவனக்குறைவு மற்றும் அவசரம். இடத்தை விட்டு அகன்ற பின்தான்,மீதி தோகை அதிகமாய் கொடுத்த மாதிரி இருக்கே என்ற ஒரு குழப்பம் ஏற்படும். ஒருபோதும் மீதி சில்லறையை சரி பார்ப்பதே இல்லை என்பது என்னிடம் உள்ள குறை.நம்பிக்கைதான். அதுவும் பேருந்து நிலையத்தில் 52 ரூபாய்க்கு நூறு கொடுத்தால்,உடனே எட்டு ரூபாய் சில்லறை வைத்துவிட்டு,மற்றவரிடம் என்ன சார் வேணும் கவனத்தை திருப்பி கொள்வான். நானும் புத்தகத்தை பார்த்து கொண்டே எட்டு ரூபாய் எடுத்து கொண்டு அகன்ற சம்பவங்கள் இன்றுவரை தொடருகின்றான். நன்றி

    ReplyDelete