Thursday, July 30, 2009

என் மகனின் முதல் ஆசிரியருக்கு!



ஐயா ,

இவன் எங்கள் வீட்டின் செல்ல இளவரசன் -இங்கே
இவன் வைத்தது தான் சட்டம் . இவனுக்கு
உலகில் அனைவரும் சமமானவர்கள் என்பதை
உங்கள் பாரபட்சமற்ற போக்கால் புரிய வையுங்கள்.

இவனுக்கு அ,ஆவோடு சேர்த்து வாழ்வின்
அரிச்சுவடியையும் சொல்லி கொடுங்கள்.
இவன் வீட்டை தாண்டிய உலகத்தை
முதன்முறையாக எட்டி பார்க்கிறான்,
இவனுக்கு பாடத்தோடு பூக்களையும் ,
பட்டாம்பூச்சிகளையும் ,பறவைகளையும்
ரசிக்க சொல்லி கொடுங்கள்.

இந்த பிரபஞ்சத்தின் அத்தியாயங்களை இவன்,
உங்கள் கண் கொண்டு வாசிக்க போகிறான்.
இவனை சிறு,சிறு அதிசயங்களிலும் வியக்க வையுங்கள்.

இவன் எங்கள் வீட்டில் நடை பயில்வதெல்லாம் ,
எங்கள் உள்ளங்கைகளில் தான்.ஆனால்
வாழ்வில் முட்புதர்களையும் தாண்ட வேண்டி வரும்
என்று சொல்லி கொடுங்கள்.

இந்த உலகின் யதார்த்தத்தை உங்கள் பிரம்பினால் அல்ல ,
பரிவினால் புரிய வையுங்கள்.
உண்மை என்னும் ஆயுதத்தை இவனுக்கு அறிமுகப்படுத்துங்கள்.
அதை இறுதிவரை கடைப்பிடிக்கும்
வழி முறையையும் சொல்லிக் கொடுங்கள்.

இவனுக்கு இதுவரை எங்கள் வீடு தான் உலகம்.
இனி ,உலகையே தன் வீடாய் பாவிக்கக் கற்றுக் கொடுங்கள்.

நட்பை போற்றச் சொல்லுங்கள்,
நல்லதை பாராட்டச் சொல்லுங்கள்,
திறந்த மனம் கொண்டிருக்கச் சொல்லுங்கள்,
திறம்பட செயலாற்றச் சொல்லுங்கள்.......
ஐயா,

இவன் வல்லவனாகவும்,
நிச்சயம் நல்லவனாகவும் வளர,
உங்களை முன் மாதிரியாய் நிறுத்துங்கள்.
நன்றி!

(சமர்ப்பணம் :என் முதல் ஆசிரியைக்கு !)



(Inspired from Abraham Lincoln Letters)



நட்புடன்,

பாலகுமார்.

18 comments:

  1. நல்லாருக்கு உங்க சிந்தனை! :-)

    ReplyDelete
  2. நல்லாருக்கு பாலா.

    //இவன் எங்கள் வீட்டில் நடை பயில்வதெல்லாம் ,
    எங்கள் உள்ளங்கைகளில் தான்.ஆனால்
    வாழ்வில் முட்புதர்களையும் தாண்ட வேண்டி வரும்
    என்று சொல்லி கொடுங்கள்.//

    நிதர்சனம்.

    ReplyDelete
  3. இதை நிச்சயம் ஒவ்வொரு ஆசிரியரும் படிக்க வேண்டும் ....

    ReplyDelete
  4. நன்று.. நாங்களும் முயற்சிக்கிறோம்!!

    ReplyDelete
  5. //இந்த உலகின் யதார்த்தத்தை உங்கள் பிரம்பினால் அல்ல ,
    பரிவினால் புரிய வையுங்கள்.//

    அருமையாக சொன்னீர்கள்.

    ReplyDelete
  6. இவனுக்கு இதுவரை எங்கள் வீடு தான் உலகம்.
    இனி ,உலகையே தன் வீடாய் பாவிக்கக் கற்றுக் கொடுங்கள்.

    //////

    Miga ARUMAIYANA VARIGAL.....

    ReplyDelete
  7. நல்லாருக்கு ... ரசித்தேன் உங்கள் வரிகளை

    ReplyDelete
  8. உண்மையான வார்த்தைகள்..

    இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ற கருத்துகள்

    ReplyDelete
  9. அருமை. நல்ல சிந்தனை மற்றும் நல்ல எழுத்து

    ReplyDelete
  10. Solla vaarththaiye illai.....

    My most fav poem in ur diary...

    Superb nu simple ah kooda sollira mudiyaathu......

    !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    ellaarukkum poruntha kooda miga arumaiyana varigal.......

    [ok senti ment a feel panniten podhum ippa matter ku varen...:)]

    ithu unga maganin mudhal aasiriyarukka?

    eppadi pa ippadi ellaam feel panreenga? :) anubavam illanu ithula oru pinkurippu veru....:)
    nambittom......:) :) :)

    ReplyDelete
  11. Solla vaarththaiye illai.....

    My most fav poem in ur diary...

    Superb nu simple ah kooda sollira mudiyaathu......

    !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    ellaarukkum poruntha koodiya miga arumaiyana varigal.......

    [ok senti ment a feel panniten podhum ippa matter ku varen...:)]

    ithu unga maganin mudhal aasiriyarukka?

    eppadi pa ippadi ellaam feel panreenga? :) anubavam illanu ithula oru pinkurippu veru....:)
    nambittom......:) :) :)

    ReplyDelete
  12. Good thoughts!

    //உண்மை என்னும் ஆயுதத்தை இவனுக்கு அறிமுகப்படுத்துங்கள்.
    அதை இறுதிவரை கடைப்பிடிக்கும்
    வழி முறையையும் சொல்லிக் கொடுங்கள்.//

    அருமையான வரிகள் ....பள்ளி பருவத்திலே இது மாதிரியான அடித்தளம் தான் பிற்காலத்தில் நல்ல மனிதர்களை சமூகத்தில் உருவாக்கும்....(100/100 - மட்டும் அல்ல )

    //nambittom......:) :) :)//

    என்னால நம்ப முடியல .......

    -மதன்

    ReplyDelete
  13. நல்லா இருக்கு..... வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  14. //nambittom......:) :) :)//
    என்னால நம்ப முடியல .......

    -மதன்

    ippadiyellaam velipadaiya unmaiya solla koodathu madhan....
    nambittom nu na sonna vidhame opposite thaan...
    :-) :-)

    ReplyDelete
  15. சந்தனமுல்லை,வடகரை வேலன், தமிழ்ப்பிரியா, கலையரசன், சொல்லரசன், சரண், சூரியன், ச.செந்தில்வேலன், jothi, sathya, மதன், மயிலவன் ....

    அனைவருக்கும் மிக்க நன்றி ......
    தொடர்ந்து வருகை தாருங்கள் :)

    ReplyDelete
  16. You know, your son's first teacher would be his Mother!
    Is n't it?

    ReplyDelete
  17. ya, for sure thats true.
    thanks for coming, babu.

    ReplyDelete
  18. பாலா கண் கலங்க வைத்த வரிகள்

    ReplyDelete