Thursday, December 11, 2008

22 புரோட்டா, 18 ஆம்லேட், 1 பொண்ணு ... அதுக்கும் மேலடா எங்க நட்பு !

என்ன பெட்டு(Bet) ?

       ஒரு சனிக்கிழமை ராத்திரி, ஹாஸ்டல்  பசங்க எல்லாம் செம Holiday Mood இருந்தானுங்க. கொண்டாட்டத்தின் ஒரு பகுதியா, ஹாஸ்டல் சாப்பாட புறக்கணிச்சுட்டு, ஹாஸ்டலுக்கு  வெளியே 2 கி.மீ தள்ளி இருக்குற புரோட்டா கடைக்குக் கிளம்பிப் போனோம்.

      அந்த கடைல சர்வ் பன்ற ஆளு, கிறுக்கனுக்கு ரொம்ப தோஸ்து. பின்ன இருக்காதா............  ஒரு நாள் அவர் பரிமாறிக்கிட்டு இருக்கும் போது, வழக்கமா சால்னா கிடக்குற கரப்பான்பூச்சி ஒன்னு, அவர் தோள்பட்டைல டான்ஸ் ஆடிட்டு இருந்துச்சு. கிறுக்கன் தான் ரொம்ப நல்லவனாச்சே....

      "அண்ணே, அப்படியே நில்லுங்க !" ன்னு சொல்லி, அந்த கரப்பான்பூச்சிய கீழே தட்டி விட்டான்.

அவரு அப்படியே புல்லரிச்சுப் போய்ட்டாரு.

      "தம்பி, உஙகளுக்கு என் மேல இம்புட்டு பாசமா ?" ன்னு feeling ஆகிட்டாரு.

      அதுல இருந்து அவங்க ரெண்டு பேரும் எப்பப்பார்த்தாலும் கொஞ்சிக் குலாவிக்குவாங்க. கிறுக்கனுக்கு அந்த கடைல அதுக்கப்பறம் ஸ்பெஷல் மரியாதை தான். இதோட உச்சகட்டமா, எல்லாரையும் தம்பினு கூப்பிடுற அவரு, கிறுக்கன மட்டும், அண்ணன்னு கூப்பிட ஆரம்பிச்சுட்டாரு.

      ச்சே!, நட்பு கரப்பான்பூச்சி வழியா கூட பூக்குது பாருங்க.

 

ஆனா, இப்ப மேட்டர் இது இல்ல................. பின்ன ............................

 

      அன்னைக்கு Celebration Mood இருந்த பசங்க எல்லாம், கடைய காலி பண்ணி ஏப்பம் விடுறதுலயே குறியா இருந்தாய்ங்க.

பேச்சுவாக்குல கிறுக்கனுக்கும் வாய்க்காவுக்கும், யார் நிறையா சாப்பிடுறாங்கன்னு போட்டி வந்துருச்சு.

 

      பெட்டு(Bet) என்னன்னா, போட்டில ஜெயிக்கிறவன் சைட் அடிக்குற பொண்ண, தோத்தவன் பார்க்கக்கூடாது. கொடுமை என்னன்னா, அந்த டைம் ரெண்டு நாய்களும் ஒரே பொண்ணு பின்னாடி தான் சுத்திட்டு இருந்தாய்ங்க.

 

      போட்டி வெறியா மாறி, கிறுக்கன் 22 புரோட்டா, 18 ஆம்லேட் ன்னு முதல் எடத்த பிடுச்சுட்டான். வாய்க்காவும் சளைச்சவன் இல்ல, 20 புரோட்டா, 15 ஆம்லேட் ன்னு நெருங்கி வந்தான். ஆனா கிறுக்கன தொட முடியல.

 

      சரின்னு, நாங்க எல்லாரும் ரொம்ப பெருந்தன்மையா, நடு நிலைமையோட, மானசீகமா, அந்த பொண்ணு கிறுக்கனுக்குத் தான்னு தீர்ப்பு சொன்னோம். (பின்னாடி, ஒரு நாள், கிறுக்கனா, Silly Fellow! ன்னு அந்த பொண்ணு சொன்னதா காந்தி ஹாஸ்டல் முழுதும் டமாரா அடிச்சது வேற கதை!)

 

      ஹாஸ்டலுக்கு திரும்பி வரும் போது முழுதும், வாய்க்கா கிறுக்கன மொறச்சுக்கிட்டே வந்தான். அவனுக்கு ஆத்திரம் அடங்கவே இல்ல... புலம்பிடே வந்தவன், திடீர்ன்னு வெறி வந்து காடு சட்டைய பிடுச்சு,

      "டேய் துரோகி, நீதான்டா இந்த கதிக்கு எல்லாம் காரணம், நான் வேணாம், வேணாம்னு சொன்னேன். நீதான்டா நல்லாருக்கு, நல்லாருக்குன்னு சொல்லி காலைல என்னை நாலு தட்டு வெண்பொஙல் சாப்பிட வச்ச, அதனால தான் டா, இப்போ என்னால சரியா சாப்பிட முடியல !"

 

வாய்க்கா என்னவோ ரொம்ப சீரியஸாத்தான் திட்டினான். ஆனா காடு ரொம்ப கஷ்ட்டப்பட்டு சிரிப்ப அடக்கிட்டு,

      "பரவால்ல வாய்க்கா, அந்த பொண்ணு ஒன்னும் Super Figure இல்லடா, உன் ரேஞ்ஜுக்கு காலேஜே பின்னாடி வரும், கிறுக்கன் பாவம், பொழச்சுப் போறான் விடு" ன்னு சமாதானப்படுத்தினான்.

 

      ஆனாலும், வாய்க்காவுக்கு டென்ஷன் குறையவே இல்லை. எங்க எல்லாரையும் திட்டிக்கிட்டே வந்தான். ஹாஸ்டலுக்கு வந்த பிறகு கூட, கிறுக்கன்ட்ட ஒரு வார்த்தை கூட பேசல. நைட் கதையடிக்கும் போது கூட, ரெண்டு பேரும் முகத்துக்கு முகம் பார்க்கக்கூட இல்ல. நாங்க எல்லாரும் கொஞ்ச நேரம் பேசிட்டி அப்படியே தூங்கிட்டோம்.

 

      மறு நாள் ஞாயிற்றுக்கிழமை ... எல்லாரும் ஒரு பத்து, பத்தரை மணிக்கு எழுந்து, கிரிக்கெட் விளையாடக் கிளம்பிட்டோம். கிறுக்கனும் வாய்க்காவும் மட்டும் ரூம்ல தூங்கிட்டு  இருந்தாய்ங்க.

ஒரு பதினோரு மணிக்கு எழுந்த கிறுக்கன் ரூம்ல இன்னொரு மூலைல தூங்கிட்டிருந்த வாய்க்காவை மெதுவா எழுப்பி,

      "டேய் சாரிடா, நீயும் அந்த பொண்ணை சைட் அடிச்சுக்கோடா !"

உடனே, வாய்க்காவும் செண்டிமென்ட் ஆகிட்டான்.

      "இல்லடா, நான் தோத்துப்போனவன் டா, அவ உனக்குத்தான் டா சொந்தம்!"

(நல்ல வேளை, இந்த டயலாக் எல்லாம் அந்த பொண்னோட அப்பா கேட்க எந்தவிதமான வாய்ப்பும் இல்லை)

கிறுக்கனும் விடாம,

      "இல்லடா, நேத்து ராத்திரி எனக்குத் தூக்கமே வரலடா, நான் தப்பு பண்ணிட்டேன் டா, அந்த கடை சர்வர் எனக்குப் பழக்கங்கிறதால, கணக்க கூட்டி சொல்ல வச்சுட்டேன் டா. ஆனா நைட் முழுதும் மனசாட்சி உறுத்திட்டே இருந்துச்சு, நீயும் நைட் முழுதும் தூஙாம மனசு கஷ்ட்டப்பட்டுட்டு இருந்தத கவனிச்சேன் டா, அதான் உண்மைய சொல்லிட்டேன், சாரிடா !"

பதிலுக்கு வாய்க்காவும் உருகிப்போயிட்டான்.

      "கிறுக்கா, எப்போ நீ  Figuare விட, Friendship பெருசுன்னு நினைச்சியோ, அப்பவே நீ கிரேட் ஆகிட்டடா!"

 

ரெண்டு பேரும், கன்வின்ஸ் ஆகி, கட்டிப்பிடுச்சு, நெஞ்ச பிறாண்டிகிட்டு இருந்தத பார்த்த காந்தி கடுப்பாகிட்டான்.

      "டேய், பரதேசி நாய்களா, நைட் ரெண்டு பேரும் அந்த தீனி தின்னதால தூக்கம் வராம மலைப்பாம்பு மாதிரி நெளிஞ்சுட்டு கிடந்தீங்க, இதுல மனசாட்சி Feeling வேறயா? மரியாதையா ஓடிப்போங்கடா "

 

இவனுங்க ரெண்டு பேரும் அசராமல்,

      "வாடா, நம்ம நட்பை பத்தி இவனுக்கு என்ன தெரியும், மணி பதினொன்னரை ஆச்சு, மசால் தோசை தீர்ந்து போறதுக்குள்ள போகலாம் !" ன்னு ஜோடியா கைய கோர்த்துட்டு மெஸ்க்கு கிளம்பிட்டாய்ங்க...

 

(அதே நேரம், இவனுங்க ரென்டு பேரும் இனிமே சேர்ந்து சைட் அடிக்கப்போற அந்த பொண்ணு, அவளுக்குப் பிடிச்ச பையனோட,

ஹாஸ்டல க்ராஸ் பண்ணி பைக்ல வேகமா பறந்துட்டு இருந்தது, இப்போ தேவை இல்லாத விஷயம்...)

     இன்னும் கிறுக்குவோம்...

அடுத்த வாரம் : "பின்னாலிருந்து Sticker ஒட்டும் பேமானித்தனமும், பெண்ணினத்தின் பெருந்தவிப்பும்"

 

10 comments:

Anonymous said...

Namma maduraikara makkalukkey uriya landhu!
Nalla irukku bossu!!
Thodarndhu valara vaazthukkal :-)

சோலைஅழகுபுரம் - பாலா said...

நன்றி அனானி அண்ணே (அக்கா ??) !!!

Maanasthan said...

i would say this is the best blog in ur collection... i have read this blog atleast 10 times... please write blogs atleast once in a week.

//"கிறுக்கா, எப்போ நீ Figuare ஐ விட, Friendship பெருசுன்னு நினைச்சியோ, அப்பவே நீ கிரேட் ஆகிட்டடா!"//

dey... eppidiraa manasaatchi'ye illaama uyir vaalureenga...

endaa, oru ponnoda vaalkaiya kevalam parotta'va vachiyaada mudivu pannuveenga...neengellaam akkaa thangachi'yoda porakkaliyaa... unga parambarai'la yaarume akkaa thangachi'yoda porakkalaiyaa...

ungala yellaam thattiketka yarume illayaa...

ellaaththaiyum mannichiralaam, aanaa "karappaanpoochi" valiyaa natpu malarndhadhu sonniye... dey saththiyama solren'daa , intha karumaththa padichadil'irundhu 2 naal enakku vaayila soru thanni irangalai daa...

nallaayirungadaa... nallaayirungadaa...

dear balaa, i think u have no problem, when i address u with words like "vaadaa, podaa" etc... kindly tell me if iam offending u... after all, iam a reader of ur writings, u can atleast give me this previlage... what do you say...

by,
padmashri.maanasthan(pride man).
CEO - BPMPVVVV sangam
(blog'ungara perla mokka podura vengambayalugala veratti veratti vettugira sangam)
govt of India approved,
non profit organisation,
no branches outside chennai,
litigation entertained only in chennai high court,
membership fee - just RS 100 or us$ 2.5 or 2 uk poundsterling,
Donations accepted,
website:www.maanasthan.com
email:maanasthan@yahoo.com

பாலகுமார் said...

maanasthan,
cool cool.. take it lightly...

i don't have any problem, if its not crossing ur border. may i know abt u ?

mony said...

//ellaaththaiyum mannichiralaam, aanaa "karappaanpoochi" valiyaa natpu malarndhadhu sonniye... dey saththiyama solren'daa , intha karumaththa padichadil'irundhu 2 naal enakku vaayila soru thanni irangalai daa...//

அப்படீன்னா எந்த வழியா சாப்பிட்டாராம் ?

நவநீதன் said...

// அந்த பொண்ணு, அவளுக்குப் பிடிச்ச பையனோட, ஹாஸ்டல க்ராஸ் பண்ணி பைக்ல வேகமா பறந்துட்டு இருந்தது,//
ஆரிய கூத்தாடினாலும் தான்டவகோனே...காரியத்துல குறியா இருந்திருக்கீங்க போல.

ஒரு காதல் தேவதை said...

//"வாடா, நம்ம நட்பை பத்தி இவனுக்கு என்ன தெரியும், மணி பதினொன்னரை ஆச்சு, மசால் தோசை தீர்ந்து போறதுக்குள்ள போகலாம் !" ன்னு ஜோடியா கைய கோர்த்துட்டு மெஸ்க்கு கிளம்பிட்டாய்ங்க...//

இதை படித்துவிட்டு சிரிப்பின் உச்சத்திற்கு சென்றுவிட்டேன்... அருமையாக இருந்தது... வாழ்த்துகள்...

பாலகுமார் said...

நன்றி நவநீதன் !!!

நன்றி ஒரு காதல் தேவதை !!!

பட்டாம்பூச்சி said...

கலக்கல் அண்ணே...
தலைப்பே சிரிப்பை வரவழைத்தது......பதிவை படித்து இன்னும் சிரித்தேன்.
பதிசு ஜூப்பரு :))).

பாலகுமார் said...

பட்டாம்பூச்சி,
நொம்ப டாங்ங்ங்ங்ங்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் :)

Post a Comment