Friday, October 19, 2012

இது தான் சார் வாழ்க்கை!

அண்ணா பல்கலைக்கழக மதுரை மண்டல மையத்தில் ஒரு கருத்தரங்கு. சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் நினைவுப்பரிசாக தமிழ் புத்தகங்களை வழங்கினார்கள். “அட!” என்று ஆச்சர்யத்துடன் என்ன புத்தகங்கள் என்று எட்டிப்பார்த்தால்... புத்தங்களை தேர்வு செய்தவர் “நீயா நானா” கோபிநாத்தின் வெறித்தனமாக ரசிகர் போல. எல்லாமே அவர் எழுதிய புத்தகங்கள் தாம். அவர் இவர் இலக்குக்குப் போதுமான புத்தங்கள் இன்னும் எழுதவில்லை போல. ஓரிரண்டு புத்தகங்களை நான்கைந்து பிரதி வாங்கி வந்து அடுக்கி விட்டார். ”அட, அடடடடா!!!!”வாகிவிட்டது.

# வாழ்க ப்ராண்ட் செல்லிங்.
**************************************

சென்ற வாரத்தில் ஒருநாள், அலுவலகத்தில் ஒருவர் விடாமல அனைவரும் என்னைப் பார்த்து கேட்ட கேள்வி: “நீங்க தி.மு.க வா?, இத்தனை நாளா தெரியாதே !”

அவர்களுக்கு நான் சொன்ன பதில், “நிச்சயமா நான் தி.மு.க இல்ல, அவங்களோட எனக்கும் நிறைய வாய்க்கா வரப்பு தகராறு இருக்கு. ஆனா, சர்க்கஸ் கூடாரம் மாதிரி கூத்தடிச்சிட்டு இருக்குற, நிர்வாகம் சீரழிஞ்சு போய் கிடக்குற, சாதாரண மக்களோட அன்றாட பிரச்சனைகளை மறந்தும் கண்டுகொள்ளாத, ஒரு அமைச்சர் தன் துறையைப் பற்றி கள ஆய்வு செய்யிற அளவுக்குக் கூட நேர அவசாகம் கொடுக்காமல் பதவிகளை சுழற்றி அடிக்கிற, தொலைநோக்குத் திட்டங்களோ, மின்வெட்டு, விலைவாசி உயர்வு போன்ற அத்தியாவசியப் பிரச்சனைகளை சரி செய்வதற்கோ ஏதேனும் போர்க்கால நடவடிக்கைகள் பற்றி யோசிக்கக் கூட முடியாத, கூடங்குளம் போல தீப்பற்றி எரியும் நிகழ்வுகளில் எண்ணெய் ஊற்றும் ஒரு செயல்படாத இருண்ட அரசு நிர்வாகத்துக்கு எதிரா போராட்டம் நடத்தும் மாநிலத்தின் “பெரிய” எதிர்க்கட்சிக்கு நான் வெளில இருந்து ஆதரவு கொடுக்குறேன். அதுக்குத் தான் கருப்பு சட்டை.”

#இவ்ளோ லென்த்தா தம் கட்டி பேச முடியல, சார்ட்டா தான் சொன்னேன் :)

**************************************

பதினாலு மணி நேரம் கரண்ட் இல்லாம தொழில் முடங்கிப் போய் அவனவன் சாக மாட்டாம கெடக்குறாய்ங்க... பொழப்பத்த பத்திரிக்கைக்காரனுவ “மின்சாரத்தடையால் பொதுமக்கள் மெகாசீரியல் பார்க்க முடியாமல் தவிக்கின்றனர்”னு முதல் பக்க செய்தி போடுறான். ”செய்தித்தாளில் விளம்பரம் கொடுத்தால் கரண்ட் இல்லாட்டியும் பார்க்கலாம்”னு சந்துல சிந்து வேற.... என்ன பொழப்பு இதெல்லாம்?

**************************************


பணிநிமித்தமாக ஒரு மத்திய அரசு நிறுவனத்திற்கு சென்றிருந்தேன். அரசு நிறுவனம் தானா என வியக்க வைக்கும் வண்ணம் அவ்வளவு தூய்மை. எதிரில் வருபவர்கள் எல்லோரும் “சயிண்டிஸ்ட்” என்று தான் அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். “பாதுகாக்கப்பட்ட பகுதி” என அறிவிக்கப்பட்டு, சிறப்புத் தூய்மையுடன் சில அறைகளும் இருந்தன. குளிரூட்டப்பட்ட அந்த அறைகளில் ஒன்றினுள் எட்டிப்பார்த்தால், சீராக அமைக்கப்பட்ட தடுப்புகளில் எல்லாம் ஏதேதோ போட்டு வைத்து ரகம் ரகமாக ’கொசு’ வளர்க்கிறார்கள். என்னடா இது இந்தியாவுக்கு வந்த சோதனை என்று விவரம் கேட்டால், புதிய வகை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிப்பதற்காக கொசுவை வளர்த்து ஆராய்ச்சி செய்கிறார்களாம். 

“கொசுவுக்கெல்லாம் விஞ்ஞானியா” என்று கேட்க நினைத்தேன், கேட்கவில்லை.

#”இது தான் சார் வாழ்க்கை!” என்று ’டேக்’ மட்டும் போட்டு அமைகிறேன், நன்றி வணக்கம்.
**************************************

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்.

அனுஷ்கா முத்தலாக இருக்கிறார் என்று நாக்கின் மீது பல்லைப் போட்டு பேசும் நயவஞ்சகர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன், “அவர் பிஞ்சாக வந்த போது ஆதரவளிக்காமல் துரத்தி விட்ட பாவிகள் தான் நாமெல்லாம் என்பதை மறந்து விடக் கூடாது”.

**************************************

4 comments:

  1. அதெல்லாம் சரி... முடிவில் என்ன இப்படி ஒரு நியாயமான கோபம்...?

    ReplyDelete
  2. உங்கள் ஆதங்கமெல்லாம் ஒ.கே. ஆனா இந்தியா ஒரு ஜனநாயகநாடு என்பதை மறந்துவிட்டு இப்படியெல்லாம் ஆதங்கபடக்கூடாது.
    # விற்பனையாகாத புத்தகங்களை எப்படித்தான் யூஸ் பண்றதாம்.
    # கருப்பு சட்டை போட்டுக்கிறதில தப்பு இல்ல ஆனா அது கலைஞர் சொன்ன அன்னைக்கு போட்டதுனாலத்தான் அது போல கேட்டிருக்கிறார்கள். நாம எப்போவுமே கத்திய எடுத்து எதிர்ப்ப காண்பிக்கிற வேலை வந்த கூட சட்டையில்லிருந்து தான் ஆரம்பிப்போம் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
    # மின்சாரமில்லாமல் வாழ்வது எப்படி? என்று போட்டுவைத்தால் முதல் பரிசு தமிழனுக்குத்தான் ( சம்சாரம் இல்லாமல் வாழ்வது தான் கஷ்டம். ஏன்னா எதையுமே வச்ச எடம் தெரியாம, அல்லாடுரப்ப சம்சாரம் இல்லாட்டினா நாம்படு கஷ்டம் தானே! )
    # கொசு இல்லாமல் நம் விஞ்ஞானம் கூட வெற்றிபெறாது போல!
    # அனுஷ்கா பாவம் சார்; அவளும் பெண் தானே!

    ReplyDelete
  3. இந்தியா ஜனநாயக நாடு என்று எனக்கு மறந்து போய்விட்டது! ஞாபகபடுத்தியதிற்கு நன்றி நாகராஜன் அவர்களே! அடுத்து இன்னொரு மறதி. அதாவது மக்களுக்காக, மக்களால் நடத்தப்படும் ஆட்சி தானே ஜனநாயக ஆட்சி?

    ReplyDelete